வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு கட்டடத்திற்குள் அத்துமீறி நுழைந்த செயல் தேசத்திற்கு பெரும் அவமானம் என்றும், டிரம்பின் ஆதரவாளர்களின் செயல்களுக்கு துணை அதிபர் மைக் பென்ஸ்சும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த குடியரசு கட்சி வேட்பாளரான அதிபர் டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்து வருகிறார். இது தொடர்பாக வழக்கு போட்டுள்ளார். ஆனால், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வரும் 20-ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார். முன்னதாக இன்று (வியாழக்கிழமை) அமெரிக்க நாடாளுமன்ற விதிப்படி அவருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வாஷிங்டன்னில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் வியாழக்கிழமை நடைபெற்று வந்தது.
இதுதொடர்பாக, அதிபர் டிரம்ப் சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோ, வைரலாகி, சர்ச்சை உருவானது. அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதுடன், நாடாளுமன்றத்திற்குள்ளும் நுழைந்தனர். இதையடுத்து, தேசிய பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சூடு நடத்தி வன்முறையாளர்களை கலைத்தனர். இதில் பலத்த காயமடைந்த பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு உலக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அரசியலிலும், மக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்தி வரும் வன்முறைப் போராட்டங்களுக்கு துணை அதிரபர் மைக் டென்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். எலக்டோரல் கலேஜ் உறுப்பினர்களின் வெற்றியை உறுதி செய்யும் நிகழ்விலும் டிரம்பின் அறிவுறுத்தல்படி நடக்கப்போகவில்லை என்றும் அரசியலமைப்பு சாசனத்தின்படியே நடக்கப்போவதாகவும் துணை அதிபர் மைக் பென்ஸ் அறிவித்தார்.