சண்டிகர்: டெல்லி உயர்நீதிமன்றத்திலிருந்து மோடி அரசின் அறிவுறுத்தலால் சண்டிகர் உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நீதிபதி முரளிதருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, டெல்லி பார் அசோசியேஷன் சார்பாக நீதிபதி முரளிதருக்கு வழக்கத்துக்கு மீறிய முறையில், வெகுசிறப்பான பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.

இதனையடுத்து, சண்டிகருக்கு சென்ற அவருக்கு, அங்கும், பஞ்சாப் மற்றும் சண்டிகர் உயர்நீதிமன்ற பார் கவுன்சில் சார்பாக மிகச்சிறப்பான உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மார்ச் 5ம் தேதி இரவு, சண்டிகர் ரயில் நிலையத்தில், பஞ்சாப் மற்றும் சண்டிகர் உயர்நீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் கரன்ஜித் சிங், 50 நபர்களுடன் இண‍ைந்து நின்று நீதிபதியை வரவேற்றனர்.

மேலும், பேனர் சகிதமாக அவர்கள் அங்கு சென்றிருந்தனர்.
பேனர்களில், “டெல்லிக்கான இழப்பு – பஞ்சாபிற்கான வெகுமதி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

[youtube-feed feed=1]