சென்னை: நவம்பர் 23ம் தேதி கிராமசபை கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
நவம்பர் 1ந்தேதி உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாட்டில் அன்றைய தினம் கிராமசபை கூட்டம் நடைபெறும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, நவம்பர் 1ந்தேதியும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், கிராமசபை கூட்டம் நடைபெற முடியாமல் போனது.
இதைத்தொடர்ந்து,. நவம்பர் ஃம் தேதி உள்ளாட்சி தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம், வரும் 23ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் நவம்பர் 23ம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும், நடக்கும் இடம், நேரத்தை தெரியப்படுத்த அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில், நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம், நிர்வாக காரணங்களுக்காக 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமசபை கூட்டத்தை ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி 23ம் தேதி காலை 11 மணியளவில் நடத்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
நவம்வர் 1ந்தேதி உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும்! தமிழகஅரசு அரசாணை வெளியீடு…