விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் வெப்பங்கோட்டையில் நடைபெறும் அகழாயில் தங்க நாணயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே  விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் பகுதியில் இரண்டு கட்ட அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளன. இந்த அகழாய்வில் சுடுமண்ணாலான பகடைக்காய், தக்களி, ஆட்டக்காய்கள், முத்துமணிகள், சங்கு வளையல்கள், பெண் உருவம், காளை உருவம், சுடுமண்ணால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருள்கள், பதக்கம், குடுவை, புகைக்கும் குழாய், கோடரி, பழங்கால பாசி மணிகள் உள்ளிட்ட 7,900க்கும் மேற்பட்ட பழமையான தொல்பொருட்கள் கிடைத்தன.

இந்த பொருட்கள் அதே பகுதியில் கண்காட்சி அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.  தற்போது 3 ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருன் நிலையில், வெம்பக்கோட்டை அகழாய்வில் 17ம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்த தென் இந்திய தங்க காசு என சொல்லப்படும் தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

இந்த தங்க நாணயத்தின் ஒரு பக்கத்தில் 6 இதழ் கொண்ட பூ போன்ற வடிவமும், மற்றொரு பக்கத்தில் புள்ளிகள் மற்றும் கோடுகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. தொல்லியல் துறை அதிகரிகள்  அகழாய்வு பணியில் தொடர்ந்து பழங்கால பொருட்கள் கிடைத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.