கடலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டங்கதளை அனுமதிக்க முடியாது என தமிழ் பேரரசுக் கட்சி நிறுவனரும், திரைப்பட இயக்குனருமான வ.கெளதமன் தெரிவித்துள்ளார்.
வடலூர் சத்திய ஞான சபையில் செய்தியாளர்களை சந்தித்த கௌதமன், “வள்ளலார் பிறந்த மண்ணில் தண்ணீரின்றி மக்கள் வாடுகின்றனர். இதற்குக் காரணம் நெய்வேலி நிலக்கரிக் சுரங்கம். இங்குள்ள வளத்தைக் கொள்ளை அடித்து தண்ணீரை வெளியேற்றுகின்றனர். ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டத்தை இந்த மண்ணில் கொண்டு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த திட்டங்களை எதிர்ப்போம். இங்கு உள்ள மக்கள் வாழ வேண்டும் என்றால், என்.எல்.சி விரிவாக்கமே இருக்க கூடாது. நிர்வாக வசதிக்காக கடலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும். விருத்தாசலத்தை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.