டில்லி
ரிசர்வ் வங்கி அளிக்க உள்ள நிதியை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரி நிதியை மத்திய அரசுக்கு அளிப்பது குறித்துப் பல வருடங்களாக அரசுக்கும் வங்கிக்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்து வந்தது. அரசின் இந்த கோரிக்கையை நிராகரித்த வங்கி ஆளுநர்கள் ரகுராம் ராஜன், உர்ஜித் படேல் போன்றோர் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பிறகு இது குறித்து ஆராய முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரைப்படி ரிசர்வ் வங்கி தனது உபரி நிதியில் இருந்து ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு அளிக்க உள்ளது.
ரிசர்வ் வங்கி அளிக்கும் நிதிப் பயன்பாடு குறித்து அரசு முடிவு செய்யும் : நிதி அமைச்சர்
டில்லி
ரிசர்வ் வங்கி அளிக்க உள்ள நிதியை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரி நிதியை மத்திய அரசுக்கு அளிப்பது குறித்து பல வருடங்களாக அரசுக்கும் வங்கிக்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்து வந்தது. அரசின் இந்த கோரிக்கையை நிராகரித்த வங்கி ஆளுநர்கள் ரகுராம் ராஜன், உர்ஜித் படேல் போன்றோர் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பிறகு இது குறித்து ஆராய முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரைப்படி ரிசர்வ் வங்கி தனது உபரி நிதியில் இருந்து ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு அளிக்க உள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த முடிவுக்கு பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை இது குறித்து கடுமையாக விமர்சித்தார். அவர் தனது டிவிட்டர் பதிவில், “தற்போதுள்ள பொருளாதார பேரழிவைச் சரி செய்யப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரிடம் எந்த ஒரு யோசனையும் கிடையாது. அவர்கள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து திருடுகிறார்கள். இது துப்பாக்கிக் குண்டு தாக்குதலுக்கு ஒரு பாண்ட் எய்ட் பிளாஸ்திரியை திருடி ஒட்டுவதற்குச் சமமாகும்” என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ராகுல் காந்தி எப்போது திருடன் திருடன் என குரல் எழுப்பினாலும் எனது மனதில் ஓன்று தோன்றும். இந்த குரலுக்கு மக்கள் ஏற்கனவே பதில் அளித்துள்ளனர் என்பதே அந்த எண்ணம் ஆகும். ஏற்கனவே பிரதம மோடியை ராகுல் காந்தி காவலர் திருடன் ஆனார் என கூறினார். ஆனால் அதுவே தோற்றுப் போன பிறகு மீண்டும் திருட்டு என சொல்வது எதற்காக?
இதற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ராகுல் காந்தி எப்போது திருடன் திருடன் எனக் குரல் எழுப்பினாலும் எனது மனதில் ஒன்று தோன்றும். இந்த குரலுக்கு மக்கள் ஏற்கனவே பதில் அளித்துள்ளனர் என்பதே அந்த எண்ணம் ஆகும். ஏற்கனவே பிரதம மோடியை ராகுல் காந்தி காவலர் திருடன் ஆனார் எனக் கூறினார். ஆனால் அதுவே தோற்றுப் போன பிறகு மீண்டும் திருட்டு என சொல்வது எதற்காக?
இந்த அரசு ரிசர்வ் வங்கியிடம் இருந்து எதையும் திருடவிள்லை. இந்த பரிந்துரையை அளித்த குழுவின் உறுப்பினர்கள் பெயரை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் அந்த குழுவை மத்திய அரசு அமைக்கவில்லை. குழுவின் தலைவரும் உறுப்பினர்களும் ரிசர்வ் வங்கியால் தேர்வு செய்யப்பட்டவர்கள். அதில் பல பொருளாதார மேதைகள் இடம் பெற்றிருந்தனர். அவர்களின் முழு ஆய்வுக்குப் பிறகே இந்த பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ரிசர்வ் வங்கி அளிக்கும் நிதியை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும்” என பதில் அளித்துள்ளார்.
இந்த அரசு ரிசர்வ் வங்கியிடம் இருந்து எதையும் திருடவில்லை. இந்த பரிந்துரையை அளித்த குழுவின் உறுப்பினர்கள் பெயரை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் அந்த குழுவை மத்திய அரசு அமைக்கவில்லை. குழுவின் தலைவரும் உறுப்பினர்களும் ரிசர்வ் வங்கியால் தேர்வு செய்யப்பட்டவர்கள். அதில் பல பொருளாதார மேதைகள் இடம் பெற்றிருந்தனர். அவர்களின் முழு ஆய்வுக்குப் பிறகே இந்த பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ரிசர்வ் வங்கி அளிக்கும் நிதியை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும்” எனப் பதில் அளித்துள்ளார்.