டில்லி
வாகனத் தொழிலில் கடுமையாக முடக்கம் ஏற்பட்டதால் மின்சார வாகன உற்பத்தியைத் தாமதம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக வாகன விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. பல முகவர்கள் தங்கள் விற்பனை நிலையங்களை மூடியதால் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலைக்கு வாகன உற்பத்தி நிறுவனங்கள் தள்ளப்பட்டன. இதனால் ஏராளமானோர் பணி இழந்துள்ளனர். மொத்த்ஹ்த்டில் வாகனத் தொழில் முடங்கிப் போனது எனவே கூற வேண்டும். பல வாகன உற்பத்தி தொழிற்சாலைகளில் வேலை இன்மை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி வாகன உற்பத்தி மற்றும் உதிரிபாக உற்பத்தி தொழிலதிபர்கள் அரசுக்கு வாகனங்களுக்கு விதிக்கப்படும் ஜி எஸ் டி வரி விகிதத்தைக் குறைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். அதே நேரத்தில் உலகெங்கும் தற்போது மின்சார வாகனங்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. ஹுண்டாய் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவின் முதல் மின்சாரக் காரை தமிழக முதல்வர் மூலம் அறிமுகம் செய்தது. அரசு தற்போது மின்சார வாகனங்கள் தயாரிப்பை ஊக்குவிப்பதாகத் தகவல்கள் வந்தன.
இந்நிலையில் சமீபத்தில் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வாகனப் பதிவுக் கட்டணத்தை ரூ.600லிருந்து ரூ. 5000 ஆக உயர்த்தியது. அத்துடன் கடந்த ஏப்ரல் 1 முதல் பிஎஸ் 4 எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இவை யாவும் வாகன விற்பனை சரிவை மேலும் அத்கபடுத்தி உள்ளது. மேலும் மின்சார வாகனங்கள் வருகையால் ஜிஎஸ்டி குறைக்கப்பட்டாலும் வழக்கமான வாகன விற்பனை அதிகரிக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
இதையொட்டி வாகன உற்பத்தியாளர்கள் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் கனரக வாகன தொழிற்சாலை அமைச்சர் அரவிண்ட் சாவந்த் ஆக்கியோருட சந்திப்பு நடத்தினர். அப்போது மின்சார வாகன உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்க வேண்டாம் எனக் குறிப்பிட்டனர். கடந்த 18 வருடங்களில் இல்லாத அளவுக்கு வாகன விற்பனை குறைந்ததற்கு இதுவே முக்கிய காரணம் என அறிவிருத்தினர். அத்துடன் அரசு அறிவித்துள்ள பதிவுக் கட்டண உயர்வைத் திரும்பிப் பெறவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதையொட்டி அரசு இரக்க அடிப்படையில் மின்சார வாகனங்கள் உற்பத்தியை சில மாதங்கள் தாமதப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. மற்ற அம்சங்கள் குறித்து அரசு விரைவில் முடிவெடுக்க உள்ளதாக அரசு தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.