டெல்லி:
முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு பாதுகாப்பு பிரிவு (எஸ்பிஜி) பாதுகாப்பை குறைப்பது தொடர்பான ஆய்வை உள்துறை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 1985ம் ஆண்டு பிரதமர் இந்திராகாந்தி சுட்டு கொலை செய்யப்பட்ட பிறகு பிரதமர், முன்னாள் பிரதமர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் எஸ்பிஜி ஏற்ப டுத்தப்பட்டது.
பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இவரது மனைவி குர்ஷ்ராம் கவுர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அவரது வளர்ப்பு மகள் நமிதா பட்டாச்சார்யா, காங்கிஸ் தலைவர் சோனியா காந்தி, இவரது மகன் ராகுல்காந்தி, மகள் பிரியங்கா ஆகிய 8 பேருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
எஸ்பிஜி பிரிவுக்கு பணிச்சுமையை குறைக்கும் வகையில் இந்த பணியை வேறு துணை ராணுவ அமைப்பிடம் ஒப்படைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது அரசியல் சார்ந்த முடிவாக இருக்கும் என்று பேசப்படுகிறது.
பாதுகாப்பு முகமைகளின் கருத்துப்படி பிரதமர் அல்லாத மற்ற 7 பேருக்கும் எஸ்பிஜி பாதுகாப்பை ஓராண்டிற்கு நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மன்மோகன்சிங் மற்றும் அவரது மனைவிக்கு வழங்கப்படும் பாதுகாப்பை மறுபரிசீலனை செய்யப்பட்டது. அவர்களுக்கு துணை ராணுவ பாதுகாப்பு அளிப்புது குறித்து விவாதகிகப்பட்டது.
பிரதமர் பதவியில் இருந்து வெளியேறிய 2 ஆண்டுகளில் பாதுகாப்பை விலக்க முடிவு செய்தது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. பிரதமர் பதவியில் இருந்து விலகி 12 ஆண்டுகளுக்கு பிறகும் வாஜ்பாய்க்கு எஸ்பிஜி பாதுகாப்பு தொடர்கிறது. எனினும் இவர் வீட்டை விட்டு வெளியில் செல்லாத நிலையிலேயே பாதுகாப்பு அளிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
92 வயதாகும் வாஜ்பாய் உடல் நிலை மிகவும் மோசமடைந்து காணப்படுவதால் அவர் டெல்லியில் உள்ள வீட்டை விட்டே வெளியில் வருவதில்லை. பிரியங்காவின் பாதுகாப்பை இதர பாதுகாப்பு அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற முடிவை நுண்ணறிவு பிரிவு தலைவர் தினேஷ்வர் சர்மா நிராகரித்தார்.
எஸ்பிஜி வசம் தற்போது 10 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். மாநில போலீஸ், துணை ராணுவப் படைகள், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மாற்றுப் பணியாக எஸ்பிஜி.யில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பணி குறித்த சரியான புள்ளி விபரங்களை வெளியிட அரசு மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.