டில்லி

த்திய அரசு பாகிஸ்தானியரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1100 கோடி மதிப்புள்ள விப்ரோ பங்குகளை விற்பனை செய்துள்ளது.

கடந்த 1960 களில் இந்தியாவுக்கும் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையே போர்கள் மூண்டன. அதை ஒட்டிஅப்போதைய அரசு எதிரி சொத்து விதி 1968 என்னும் சட்டத்தை அமைத்தது.   அதன் படி பாகிஸ்தான் பிரஜைகள் வைத்திருந்த அனைத்து இந்திய நிறுவன பங்குகளும் மற்றுமுள்ள சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு அரசிடம் இருந்தன.

தற்போது முதல் முறையாக அரசு தன்னிடமிருந்த விப்ரோநிறுவன பங்குகளை விற்ப்னை செய்துள்ளது.    கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தை ஒட்டி இந்த பங்குகள் விற்கப்பட்டுள்ளன.    அரசிடம் இருந்த விப்ரோ நிறுவனத்தின் 4.3 கோடி பங்குகள் தலா ரூ.253 வீதம் விற்கப்பட்டுள்ளன.   இதில் 3.9 கோடி பங்குகளை எல் ஐ சி வாங்கி உள்ளது.

தற்போது  ரூ. 3000 கோடி மதிப்புள்ள நிறுவன பங்குகளும் ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களும் எதிரி சொத்து விதியின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டு அரசிடம் உள்ளன.  அவைகளும் இனி விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் பிரிவினையின் போது அங்கிருந்து இந்தியா வந்தவர்களின் சொத்துக்கள் பாகிஸ்தான் அரசு பறிமுதல் செய்தது.   அந்த சொத்துக்களை அந்நாட்டு அரசு விற்பனை செய்துள்ளது.   அதற்கு பதிலாக பாகிஸ்தானியர்களின் சொத்துக்களை ஈடு கட்டிக் கொள்ள இந்தியாவுக்கு பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.