டில்லி

ண்ணெய் வர்த்தகத்தில் இருந்து அரசு வெளியேற வேண்டும் என மத்திய எண்ணெய் வள அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் எண்ணெய் வர்த்தகத்தை அரசு எண்ணெய் நிறுவனங்கள் நடத்தி வருகின்றன.   இந்த நிறுவனங்கள் தன்னிச்சையானவை என்னும் போதிலும் அவற்றை அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ளன.  எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் இயற்கை எரிவாயு இடமாற்றம் உள்ளிட்ட பணிகளைத் தனியார் நிறுவனம் செய்து வருகிறது.   இன்று எண்ணெய் வள அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது தர்மேந்திர பிரதான், “அரசு மக்களின் வாழ்க்கைக்கு சுலபமாக தேவைப்படும் பொருட்களை வழங்கும் பொறுப்பைக் கவனிக்க வேண்டி உள்ளது   ஆனால் அரசின் பணி என்ன?  அரசின் பணி அந்த வர்த்தக கொள்கைகளை உருவாக்குவது,   பொருளாதார முன்னேற்றம், அரசுக்கு நிதி வளத்தை உருவாக்குதல் மட்டுமே ஆகும்.   அரசு ஒரு நிதி உருவாக்கும் இயந்திரம் அல்ல.

எண்ணெய் மற்றும் அவை சார்ந்தவை அனைத்தும் வியாபார பொருட்கள் ஆகும்.  இவற்றை வியாபாரிகள் கவனித்துக் கொள்ள வேண்டும் அரசு இந்த வர்த்தகத்தில்  இருந்து வெளியேற வேண்டும்.  அரசு முக்கியமாகக் கவனிக்க வேண்டியவை வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலை, அணுகுமுறை, நிலைத்தமை விநியோக பாதுகாப்பு, ஆகியவற்றை நிர்ணயம் செய்வது மட்டுமே அரசின் பொறுப்பு ஆகும்.

ஏற்கனவே தொலைத் தொடர்பு, விமானப் போக்குவரத்து, சிமிண்ட் ஆகியவை தனியாரிடம் அளிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் பெரும் பயன் பெற்று வருகின்றனர். தனியார் எந்த துறையில் நுழைந்தாலும் அவர்கள் குறைந்த விலை, நிறைவான சேவை,  எளிய அணுகுமுறை, மூலதன அதிகரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.