சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், காலை உணவுத் திட்டம் செப்டம்பர் 15ந்தேதி முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தினசரி காலை என்ன வகையான உணவுகள் என்பது குறித்த தகவலும் தெரிவக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்று ஓராண்டு நிறைவையொட்டி, தமிழக சட்டப்பேரவையில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலைச் சிற்றுண்டி அளிக்கும் திட்டம் குறித்த அறிவிப்பை முதலமைச்சர் மு.க. வெளியிட்டாா். மாணவர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்தல், ஊட்டச்சத்தை உயர்த்துதல், வருகை அதிகரித்தல், வேலைக்கும் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமை குறைத்தல் உள்ளிட்டவற்றை குறிக்கோளாக கொண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். தொடர்ந்து, இந்தத் திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சில இடங்களில் பரிசார்த்த முறையாக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது
இந்த நிலையில், காலை உணவுத் திட்டதை அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 15ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்ததிட்டத்தின்படி, தமிழ்நாட்டில் உள்ள 1,545 அரசு பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது.
காலை உணவு விவரம்;
திங்கட்கிழமை – அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார்.
செவ்வாய் கிழமை– ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி.
புதன்கிழமை – வெண் பொங்கல், ரவா பொங்கல் + காய்கறி சாம்பார்.
வியாழக்கிழமை – அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார்.
வெள்ளிக்கிழமை – ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி மற்றும் ரவா கேசரி, சேமியா கேசரி.
மேலும், வாரத்தில் குறைந்தது 2 நாட்கள் உள்ளூர் சிறுதானியங்களைக் கொண்டு காலை சிற்றுண்டி வழங்க வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.