இடுக்கி: கேரளாவில் தலித்துகளுக்கு சிகை திருத்தம் செய்ய கடைகளில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், அங்குள்ள கிராமத்தில் அரசு தரப்பில் சிகை திருத்தும் கடை திறக்கப்பட்டது.
கேரளாவின் இடுக்கியில் வட்டவாட பஞ்சாயத்து தொடங்கிய ஒரு முடி திருத்தும் கடையை தேவிகுளம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் திறந்து வைத்தார். பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களின் தலைமுடியை வெட்ட இப்பகுதியில் உள்ள முடிதிருத்தும் கடைகள் மறுக்கின்றன என்று செய்திகள் வெளியாகி நிலையில் இந்த கடை தொடங்கப்பட்டது.
அரசாங்கத்தால் நடத்தப்படும் கடை, சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் பூர்த்தி செய்யும் என்று அறிவிக்கப்பட்டது. கடை தொடங்கிய பின்னர் 13 பேர் தலைமுடி வெட்ட வந்ததாக வட்டவாட பஞ்சாயத்து தலைவர் ராமராஜு தெரிவித்தார். அவர்களில் 8 பேர் பொது பிரிவைச் சேர்ந்தவர்களும், ஐந்து பேர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களும் ஆவர் என்றும் அவர் கூறினார்.
சமூகத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் முடிதிருத்தும் கடையில் நுழைய அனுமதி இல்லை என்று வெளியான தகவல்கள் ஆதாரமற்றவை என்றும் தெரிவித்தார்.