டெல்லி: வெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இறக்குமதிக்கு தளர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
வடமாநிலங்களில் பெருமழை, வெள்ளம் காரணமாக வெங்காயம் வரத்து பாதிக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து, நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்ந்து வருகிறது.
வெங்காய விலை தொடர்ந்து உயர்ந்து வருவதையடுத்து இறக்குமதிக்கு தளர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது:
வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய தற்காலிகமாக டிசம்பர் 15 வரை தளர்வு அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் வெங்காய விலை ரூ. 100யை கடந்து விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.