பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKY) திட்டத்தில் ஏளைகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் அரிசிக்கான வரைமுறையை மத்திய அரசு மாற்றியமைத்ததை அடுத்து இந்திய உணவுக் கழகத்தின் (FCI) குடோன்களில் 18 மில்லியன் டன்னுக்கும் அதிகமான அரிசி தேங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக கொள்முதல் செய்யப்பட்ட இந்த அரிசி தற்போது வீணாக தேங்கியிருப்பதை அடுத்து அதனை அப்புறப்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

https://x.com/siddaramaiah/status/1790356968030544189

இந்த நிலையில் கர்நாடக மாநில மக்களுக்கு ரேஷன் மூலம் விநியோகம் செய்ய அரிசி ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசு தற்போது அரிசியை குடோனில் வீணடிப்பது குறித்து அம்மாநில முதல்வர் சித்தராமைய்யா விமர்சித்துள்ளார்.