மும்பை
மத்திய அரசின் அடுத்த இலக்கு ஷாருக்கான் என மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்றாம் தேதி அன்று மும்பை சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் தடுப்பு காவல் துறையால் கைது செய்யப்பட்டார். அவரை மும்பையில் சொகுசுக் கப்பலில் நடந்த ஒரு பார்ட்டியின் போது சோதனை நடத்திப் பிடித்ததாக தெரிவிக்கப்பட்டது,
ஆர்யன் கான் மற்றும் அவருடன் கைது செய்யப்பட்டவர்களை வரும் 7ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் காவல்துறைக்கு அனுமதி வழங்கியது. நேற்று முன் தினம் இரவு விடிய விடிய மும்பை மாநகர் உள்ளிட்ட பல இடங்களில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இது குறித்து மகாராஷ்டிர மாநில அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அமைச்சர் நவாப் மாலிக், “ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது போலியானது. புலனாய்வு நிருபர்களிடம் இந்த தகவல் கடந்த ஒரு மாதமாக பரப்பப்பட்டுள்ளது. மத்திய அரசின் அடுத்த இலக்கு நடிகர் ஷாருக்கான்” எனத் தெரிவித்துள்ளார்.