புதுடெல்லி: பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு பருவகால கடனை வழங்கும் வகையில், வங்கிகளிடம் மத்திய அரசு பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, பிஎஸ்என்எல் நிறுவனத்தை புனரமைப்பு செய்வதற்கான திட்டத்தை மத்திய அரசு இறுதி செய்யும் வரையில், வங்கிகள் அளிக்கும் இந்த கடன்தொகை அந்த நிறுவனம் தொடர்ந்து செயலாற்ற உதவிபுரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் ரூ.2500 கோடி பருவகால கடனை வழங்கும் வகையில் அரசின் சார்பில் பேசப்பட்டு வருகிறது. எளிதான வகையில் திரும்ப செலுத்தப்படுவதற்கேற்ற வகையில் இந்தக் கடனை வழங்க வேண்டுமெனவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
செயல்பாட்டு செலவினங்கள், ஊழியர்களுக்கான ஊதியம், பில் தொகை செலுத்துதல், வியாபாரிகளுக்கான தொகைகள் உள்ளிட்டவற்றை சமாளிப்பதற்கு, வங்கிகள் தரும் அந்தக் கடன்தொகை உதவும் என்று கூறப்படுகிறது. மேலும், இதன்மூலம் அடுத்த 6 மாதங்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் சீராக செயல்படுவதற்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.