டில்லி

ன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அன்னிய முதலீட்டுக் கொள்கையில் மாறுதல்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமச்சரவைக் கூட்டம் டில்லியில் நடை பெற்றது.   இந்தக் கூட்டத்தில் அன்னிய முதலீடு பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.  கூட்டத்தின் முடிவில் அன்னிய முதலீடு கொள்கையில் பல மாறுதல்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதன் படி கட்டுமானத் தொழிலுக்கு 100% அன்னிய் முதலீட்டுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.   சில்லரை வர்த்தகத்தில் ஒற்றை பிராண்ட் வர்த்தகத்திலும் 100% அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   தற்போது ஒற்றை பிராண்ட்  சில்லரை வர்த்தகத்தில் வெறும் 49% அன்னிய முதலீட்டுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இது தவிர ஏர் இந்தியா நிறுவனத்துக்கு 49% வரை அன்னிய முதலீட்டுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.   இதன் மூலம் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் ஏர் இந்தியாவில் முதலீடு செய்ய அரசு வழி வகுத்துள்ளது.   நஷ்டத்தில் இயங்கி வரும் இந்த விமான நிறுவனத்துக்கு இந்த அறிவிப்பு மிகவும் உதவியாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.