
டில்லி
வங்கிகள் அளிக்கும் இலவச சேவைக்கும் அரசு வரி விதிப்பதாகவும் அந்த வரிப்பணத்தை தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
அனைத்து வங்கிகளுக்கும் நேற்று ஒரு நோட்டிஸ் அனுப்பி உள்ளது. அதன்படி வங்கிகள் அளித்து வரும் சேவைகளுக்கு 12% சேவை வரி செலுத்துமாறு கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2012 லிருந்து இந்த சேவை வரி கணக்கிடப்பட்டு வரியுடன் 18% வட்டி மற்றும் வரியை தாமதமாகச் செலுத்துவதால் 100% அபராதம் ஆகியவைகளுடன் செலுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து இந்திய வங்கிகள் கூட்டமைப்பு கலந்தாலோசித்துள்ளது. ஆலோசனைக் கூட்ட முடிவில் அமைப்பின் தலைவர்களில் ஒருவரும் ஸ்டேட் வங்கியின் நிதித்துறை அதிகாரியுமான அன்சுலா காந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “இந்த நோட்டிஸ் வங்கி அளிக்கும் இலவச சேவைகளுக்கும் வரி விதித்துள்ளது. அத்துடன் இந்த வரியை வங்கிகள் தங்கள் பணத்தில் இருந்து கட்ட வேண்டும் என கூறி உள்ளது.
இது குறித்து வங்கிகள் கூட்டமைப்பு ஏற்கனவே அரசுக்கு விவரங்கள் தெரிவித்துள்ளது. அவ்வாறு இருந்தும் அரசு இப்படி ஒரு நோட்டிஸ் அனுப்பி உள்ளது. ஏற்கனவே வங்கிகள் வாராக்கடன் போன்ற சுமைகளால் நிதி நெருக்கடியில் உள்ள போது இலவச சேவைகளுக்கும் வரி விதிப்பது தவறானது. இதன் மூலம் ஏற்கனவே இலவசம் என நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்த சேவைகளுக்கு இப்போது வரி விதிக்க நேரிடும் இது எவ்வாறு முறை ஆகும்?
மேலும் இது போன்ற இலவச சேவைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் வரி விதித்தால் அவர்களுக்கு இதனால் நிறைய இழப்பு ஏற்படும். இந்த இலவச சேவைகள் அனத்தும் அரசுக்கு தெரிந்தே நடைபெறுகின்றது. சில வங்கிகளில் அக்கவுண்டுகளில் குறைந்த பட்ச தொகை வைத்து இருக்காவிட்டால் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இந்த அபராதத் தொகைக்கும் அரசு வரியைக் கணக்கிட்டுள்ளது.
எனவே அரசு இது குறித்து ஆராய்ந்து விதிக்கப்பட்ட வரித்தொகையை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என கூட்டமைப்பு கோரிகை விடுதுள்ளது” என தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]