சிவகங்கை

ரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் வேலை வாய்ப்பு அதிகம் உள்ள பயிற்சிகளை விரைவில் கொண்டு வர உள்ளதாகத் தமிழக அமைச்சர் தெரிவித்துள்ளார்

ஐடிஐ என ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கப்படும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பல்வேறு விதமான தொழிற்பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதில் தேர்ச்சி பெறுவோருக்கு அரசு மற்றும் தனியார்த்துறைகளில் வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.  இன்று சிவகங்கை முத்துப்பட்டி அருகே உள்ள அரசு ஐடிஐ க்கு தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி வி கணேசன் வது ஆய்வு நடத்தி உள்ளார்.

அமைச்சருடன் மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டி மற்றும் துறை சாந்த அதிகாரிகள் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.   அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் சி வி கணேசன், “முதல்வர் ஸ்டாலின் மாநிலம் முழுவதும் உள்ள 90 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து அவற்றுக்கு தேவையான அடிப்படைத் தேவைகளைச் செய்து தர உத்தரவிட்டுள்ளார். 

அதன் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.   தொழிற்பயிற்சி நிலையங்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளது.   தொழிற்பயிற்சி நிலையங்களில் விரைவில் வேலை வாய்ப்புகளை அதிகமாக ஏற்படுத்தித் தரும் பயிற்சிகளைக் கொண்டு வர உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]