மரணத்துக்குப்பின் விழித்த மத்திய அரசு..

செய்தித்தாள்கள், ரேடியோ நிலையங்கள் மற்றும் தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம் கொடுத்த வகையில், மத்திய அரசாங்கம், ஊடகங்களுக்குக்  கிட்டத்தட்ட ஆயிரத்து 800 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது.

ஊரடங்கால், அனைத்து ஊடகங்களும் நொடித்துப் போய் கிடக்கும் இந்த நேரத்திலாவது, இந்த பாக்கியை  ஃபைசல் செய்யுமாறு, ஊடகத் துறை தொடர்பான சங்கங்கள் மத்திய அரசை வலியுறுத்தி வந்தன.

மத்திய அரசு , அச்சு ஊடகங்களுக்கு மட்டும் சுமார் 900 கோடி ரூபாய் விளம்பர பணம் கொடுக்க வேண்டும்.

நீண்ட வலியுறுத்தலுக்குப் பிறகு விளம்பர பாக்கியைக் கொடுக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

’’போர்க்கால அடிப்படையில் விளம்பர பாக்கியை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்று மத்திய தகவல் – ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொலைக்காட்சி தொடர்களின் ஷுட்டிங் நின்று போனதால், பொருளாதார சிக்கல் ஏற்பட்டு, அதன் காரணமாக, அண்மையில் பிரேக்‌ஷா மேத்தா மற்றும் மன்மீத் கிரேவால் என்ற இரு டி.வி. நடிகர்கள் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

’’அவர்களின் மரணம் தான், மத்திய அரசை விழிக்கச்செய்துள்ளது’’.என்று சொல்கிறார்கள், ஊடகத்துறை நண்பர்கள்.

–  பா.பாரதி