டெல்லி: கர்நாடகா, மத்தியபிரதேசம் உள்பட 8 மாநிலங்களில் கவர்னர்கள் இடமாற்றம் மற்றும் புதிய கவனர்கள் நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பின்வரும் நியமனங்கள் / மாற்றங்களைச் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறார் :
1) மிசோரம் மாநில கவர்னர் ஸ்ரீதரன் பிள்ளை அங்கிருந்து மாற்றப்பட்டு, கோவா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
2) அரியானா மாநில ஆளுநர் சிஹ்ரி சத்யதேவ் நாராயண் ஆர்யா இடமாற்றம் செய்யப்பட்டு திரிபுராவின் கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3) திரிபுராவின் ஆளுநர் ஸ்ரீ ரமேஷ் பைஸ் இடமாற்றம் செய்யப்பட்டு ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்படுகிறார்.
4) கர்நாடக ஆளுநராக ஸ்ரீ தாவர்சந்த் கெஹ்லோட் நியமிக்கப்பட்டு உள்ளார்.
5) ஹிமாச்சல பிரதேச ஆளுநர் ஸ்ரீ பண்டாரு தத்தாத்ரய ஹரியானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
6) மிசோரத்தின் ஆளுநராக டாக்டர் ஹரி பாபு கம்பம்பதி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
7) மத்திய பிரதேச ஆளுநராக ஸ்ரீ மங்குபாய் சாகன்பாய் படேல் நியமிக்கப்பட்டு உள்ளார்.
8) இமாச்சல பிரதேச ஆளுநராக ஸ்ரீ ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.