** தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில ஆளுநரிடம் தான் உள்ளது!

இது குறித்து சட்டமன்றத்தில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “குஜராத் போன்ற மாநிலங்களில் பல்கலைக்ககழகத் துணைவேந்தர்களை நியமிக்கும் பொறுப்பு, மாநில அரசிடம் உள்ளது!
அது போலவே தமிழகத்திலும் அதே போன்று மாநில அரசே அப்படி நியமித்திட நமது முதல்வர் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருகிறார்” என்று கூறியுள்ளார்!
இதையடுத்துப் பேசிய முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், ” நிச்சயமாக வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இத் தீர்மானம் நிறைவேற்றப்படும்.. “என்று அறிவித்துள்ளார்!
*** ஓவியர் இரா. பாரி.
Patrikai.com official YouTube Channel