சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் கையெழுத்து போடாமல் இழுத்தடித்து வந்த நிலையில், தற்போது 6 மசோதாக்களுக்கு மட்டும் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா, ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை தொடர்பான மசோதா உள்பட ஏராளமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதில் நீட் விலக்கு, பல்கலைக்கழகங்களக்கு முதல்வரே துணைவேந்தர் மசோதா  உள்பட  கடந்த 2020 முதல் இந்த ஆண்டு மே 30-ம் தேதி வரை 21 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளன, இந்த  21 மசோதாக்ளுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் இருந்து வந்தார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து  வலியுறுத்தி இருந்தார்.அதுபோல அமைச்சர்களும் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில்,  தற் போது 6 மசோதாக்களுக்கு ஆளுநர் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.

  1. தமிழ்நாடு மதிப்புக் கூட்டப்பட்ட வரி சட்ட மசோதா ,
  2. சம்பளம் வழங்குதல் திருத்த மசோதா,
  3. கூட்டுறவு சங்கங்களின் 4-வது திருத்த மசோதா,
  4. கூட்டுறவு சங்கங்களின் 3-வது திருத்த மசோதா,
  5. உள்கட்டமைப்பு மேம்பாட்டு திருத்த மசோதா,
  6. தடுப்புச் சட்டத்தில் திருத்த மசோதா

ஆகிய 6 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதன் விவரம் தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.