தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை நிறுவுவதற்கான சட்ட மசோதா கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்று, பொது மற்றும் தனியார்துறை பங்களிப்பில் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் நிறுவப்படும்.
இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதை அடுத்து ஆணையத்துக்கு ஒரு தலைவர், 3 முழுநேரம், 3 பகுதிநேர உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்.
நெடுஞ்சாலைகள் பராமரிப்பு, தரம் உயர்த்தல், நீ்ண்டகால திட்டம் தயாரித்தல் ஆகியவை இந்த ஆணையத்தின் பணியாக இருக்கும்.