லக்னோ: ஆளுநர்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் மீடியாக்கள் ஆகிய மூவரும், பாரதீய ஜனதா கட்சிக்கான தேர்தல் பிரச்சாரகர்களாக உள்ளனர் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சாடியுள்ளார்.

முன்னாள் உத்திரப்பிரதேச முதல்வரும், இந்நாள் ராஜஸ்தான் மாநில கவர்னருமான கல்யாண்சிங், “நரேந்திர‍ மோடி மீண்டும் பிரதமராவது, நாட்டிற்கு மிகவும் முக்கியமானது என்று கருத்துக் கூறியிருப்பதை ஒட்டி அவர் இந்த தாக்குதலை தொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த 5 ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது, விவசாயிகள் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். அக்கட்சியினரின் முக்கிய அரசியல் வியூகங்களானது, சமூக வலைதளங்கள், வெறுப்பு மற்றும் பணம் போன்றவையே.

இந்த நாட்டிலேயே பாரதீய ஜனதாதான் மோசமான சாதியவாதக் கட்சி. எனவே, சமதர்மம் குறித்து அவர்கள் பிறருக்கு பாடம் எடுக்கக்கூடாது” என்றுள்ளார்.

– மதுரை மாயாண்டி