சென்னை: ஆளுநர் உரைக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தது வானதிக்கு தெரியாதா? என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கவர்னர் உரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், ஆளுநரிடம் ஒப்புதல் பெறவில்லை என பாஜக எம்எல்ஏ வானதி கூறியிருப்பதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்று பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியபோது ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார்.

சட்டப்பேரவையில்  இந்தாண்டுக்கான முதல் கூட்டம் இன்று (ஜன.9) காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. காலை 10 மணிக்கு கூட்ட அரங்கில் ஆளுநர் தனது உரையை வாசிக்க தொடங்கினார்.  அப்போது,  ஆளுநரை பேசவிடாமல் ஒரு சில கட்சிகளின் எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். சுமார் 8ம நிமிஷம் நேரம் அவர்கள் கோஷமிட்ட நிலையில், அதை கண்டுகொள்ளாமல் ஆளுநர் தனது உரையை படித்து வந்தார்  அதுபோல பாமகவின்ர, பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காததற்கு கண்டனம் தெரிவித்து சட்டப்பேரவையில் ஆளுநர் எதிராக கோஷம் போடப்பட்டது. .  சட்டப்பேரவையில் கோஷமிட்ட எம்எல்ஏக்களை தடுப்பதில், சபாநாயகர் அப்பாவு ஆர்வம் காட்டவில்லை.

இந்த சூழலில் ஆளுநர் தன் உரையை  10.50 மணிக்கு வாசித்து முடித்தார். அவர், வாசித்து முடிக்கப்பட்டதும், அதன் தமிழாக்கத்தை பேரவைத்தலைவர் மு.அப்பாவு வாசித்தார்.

முன்னதாக ஆளுநர் உரையை வாசிக்கும்போது, அந்த உரையில் இருந்த திராவிட மாடல், பேரறிஞர் அண்ணா, பெரியார், காமராஜர், அமைதி பூங்கா உள்ளிட்ட வார்த்தைகளை தவிர்த்தார். அதுமட்டுமல்லாமல், சில வரிகளை தானாகவே சேர்த்துக் கொண்டார். இதற்கு அவையில் முதலமைச்சர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆளுநர் இருக்கையில் அமர்ந்திருக்கும்போதே எழுந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திராவிட மாடல் ஆட்சிக்கு முற்றிலும் முரணான வகையில் ஆளுநர் நடந்து கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.

இதன்பிறகு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்று பேரவையில் குற்றச்சாட்டினார். அவர் பேசுகையில்,”தமிழக அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை. உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்துப்படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது” என்று தெரிவித்தார். இது தொடர்பாக முதல்வர் பேசிக் கொண்டு இருக்கும் போது ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியில் வெளியேறினார்.

இதனால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது. ஆளுநர் உரையுடனான சட்டப்பேரவை ஆண்டு முதல் நாள் கூட்டமானது தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு ஆரம்பித்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிறைபெறுவதே மரபு. இந்நிலையிலை ஆளுநர் தேசியகீதம் இசைக்கப்படுவதற்கு முன்னதாக நிறைவு பெற்றதற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விமர்சனம் செய்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், இன்று திமுக அரசு தாங்கள் அரசின் திறமையின்மையை மறைக்க, ஊழலை மறைக்க, மக்கள் வாரிசு அரசியல் பற்றி பேசாமல் இருக்க இந்த நாடகத்தை நிகழ்த்தியுள்ளது என கடுமையாக விமர்சித்தார். ஆளுங்கட்சி திமுக தங்களுக்கு எதுவும் தெரியாதது போல கூட்டணி கட்சிகளை தூண்டிவிட்டு இந்த நாடகத்தை நிறைவேற்றி உள்ளது. ஆளுநர் எதை குறிப்பிட வேண்டுமோ அதனை ஆளுநர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் எழுந்துள்ள லஞ்ச, ஊழல் புகார்களில் இருந்து தப்பவும், வாரிசு அரசியல் பற்றி மக்கள் பேசுவதை தவிர்க்கவும் கவர்னருக்கு எதிர்ப்பு என்பதை கையில் எடுத்து தி.மு.க.வும், கூட்டணி கட்சிகளும் ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருக்கின்றன. அவ்வைப் பாட்டியின் தமிழ் வரிகளை கூறி கவர்னர் தனது உரையை தொடங்கிய போதே அதனை அவமதிக்கும் வகையில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் கோஷமிட்டு வெளியேறியது அநாகரீகமான செயல் ஆகும்.

கவர்னரை அழைத்து அவமானப்படுத்தி இருக்கிறார்கள். இது மாநில நலனுக்கு உகந்ததல்ல. தவறான முன்னுதாரணமாகும்.

கவர்னர் உரையில் இடம் பெற்ற விஷயங்களை அவர் பேசவில்லை என்றால் அதுபற்றி முறைப்படி கவர்னர் மாளிகைகளில் தான் கேட்க வேண்டும்.

அதை விடுத்து தாங்கள் நினைப்பதை தான் கவர்னர் பேச வேண்டும் என்று சொல்வது ஏற்புடையது அல்ல.

கவர்னர் உரையை தயாரித்து கவர்னரிடம் முறைப்படி ஒப்புதலும் பெற்றிருக்க வேண்டும்.

 திமுகவின் இந்த நடவடிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எனவும் விமர்சித்து இருந்தார்.

வானதின் பேச்சுக்கு சமூகவலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு எதிராக கவர்னர் பேசியது மரபு மீறிய செயல் எனறும்,  6 கோடி வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படட்ட அரசின் பிரதிநிதியாக முதலமைச்சர் பேரவையில் பேசிக்கொண்டிருக்கும்போதே, ஆளுநர் அவரை அமதிக்கும் வகையில் வெளிநடப்பு செய்தது எந்த வகையில் நியாயம் என்றும்,  ஆளுநரின் நடவடிக்கை தமிழக மக்களை அவமதிக்கும் செயல் என்றும் விமர்சித்து வரும் நெட்டிசன்கள், 

ஆளுநர் ரவிக்கு உரை திடீரென தரப்பட்டது என்று பொய் குற்றச்சாட்டை வைக்கும் வானதி சீனிவாசனுக்கு கவர்னர் இதற்கு கையெழுத்து போட்டு ஒப்புதல் அளித்தது தெரியாதா? எனவும் கேள்வி எழுப்பி உள்ளனர்.