திருவனந்தபுரம்:
கேரள சட்டசபையில் காங்கிரஸ் கட்சியினரின் கேள்விக்கு பதிலுரைத்த கேரள முதன்மந்திரி, முல்லை பெரியாரில் புதிய அணை கட்டுவதே மாநில அரசின் நோக்கம் என்றார்.

கேரள முதல்வர்    பினராயி விஜயன்
                              கேரள முதல்வர் பினராயி விஜயன்

கேரள மாநில முதல்வராக பொறுப்பேற்றவுடன் அளித்த பேட்டியில், முல்லைப்பெரியாறு அணை  பலமாக உள்ளது என்று  சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் க தெரிவித்து இருக்கிறார்கள்.  இந்த பிரச்சினைக்கு  தமிழக அரசுடன் பேசி சுமூக தீர்வு காண்போம். முல்லைப்பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்ற நிபுணர்கள் அறிக்கையை கேரள அரசு ஏற்றுக்கொள்கிறது. எனவே அந்த அணைக்கு பதில் புதிய  அணை கட்ட வேண்டும் என்ற முந்தைய காங்கிரஸ் அரசின் முடிவில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. புதிய அணை கட்ட வேண்டிய அவசியமும் இல்லை என்றார்.
அதே நேரத்தில் தமிழகத்தின் கோரிக்கையான  முல்லைபெரியாறு அணையின் நீர் மட்டத்தை  152 அடியாக உயர்த்தும் எண்ணமும் இல்லை. நீர்மட்டத்தை உயர்த்தினால் கேரளாவில் உள்ள பொது மக்கள் குறிப்பாக ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் முல்லை பெரியாறு அணை நீர் இரு மாநில மக்களுக்கும் பயன்படும்வகையில் செயல்படுவோம் என்றார். இவரது கருத்துக்கு தமிழக விவசாயிகளிட்ம் பெரும் வரவேற்பு இருந்ததது.
ஆனால், இவரது கருத்துக்கு காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்ததால் தனது கருத்தை வாபஸ் வாங்கினார். தற்போது நடைபெற்று வரும் கேரள சட்டசபை கூட்டத்தில் இது தொடர்பாக பேசிய கேரள முதல்வர்,  முல்லை பெரியாரில் புதிய அணை கட்டவே கேரள அரசு விரும்புகிறது. இதுவே மாநில அரசின் கொள்கை என்றும், அணையை சுற்றியுள்ள மக்களின் உயிர் உடமைகளை காப்பதிலும் மாநலி அரசு முழு கவனம் செலுத்தும் என்றும் பேசினார்.
கேரள முதல்வரின் தற்போதைய அறிவிப்பு தமிழக விவசாயிகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.