டில்லி:
நீதிமன்ற விவகாரங்களில் அரசும், அரசியல் கட்சிகளும் தலையிடக் கூடாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நீதிதுறையில் ஏற்பட்ட பிரச்னை குறித்து பிரதமர் மோடி கூறுகையில், ‘‘ஜாதி பாகுபாடு, வாரிசு அரசியல், ஊழல் போன்ற காங்கிரசின் கலாசாரங்கள் ஒழிக்கப்பட வேண்டும். நீதி துறையில் மிகவும் தகுதி வாய்ந்த நபர்கள் உள்ளனர்.
நீதி துறையில் உள்ளவர்கள் தங்களின் பிரச்னைகளுக்கு தாங்களே கலந்து பேசி தீர்வு காண்பார்கள்.
முத்தலாக் மசோதா அரசியலுக்காக அல்லாமல் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவே கொண்டு வரப்பட்டது. நீதிமன்ற விவகாரத்தில் அரசும், அரசியல் கட்சிகளும் தலையிடக் கூடாது’’ என்றார்.