டில்லி:
மற்ற மாத்திரைகளில் இருந்து ஜெனிரிக் மாத்திரைகளை வித்தியாசப்படுத்த நிற (கலர்) அடையாளம் சூட்ட மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. விரைவில், நிற அடையாளங்களை வைத்து மாத்திரைகளை வாங்கும் நடைமுறை அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலான நோய்களுக்கு, தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் மருந்துகள் அதிக விலைக்கு விற்கப்படுவதால், மக்களுக்கு பயன்படும் வகையில் குறைந்த விலையில் இந்த ஜெனரிக் மருந்துகளை மத்திய அரசு விற்பனை செய்து வருகிறது. இந்த ஜெனிரிக் மருந்துகளை மற்ற மருந்துகளில் வித்தியாசப்படுத்தும் வகையில் கலர் வகைகளை புகுந்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஜெனிரிக் மருந்து என்றால் என்ன?
ஒரு குறிப்பிட்ட நோய்க்கான மருந்தில், வணிகப் பெயர் இல்லாமல், அதில் அடங்கிய மூலக்கூறு கள் மட்டுமே இருப்பது, ஜெனிரிக் மருந்துகள் என அழைக்கப்படும்.
உதாரணமாக, காய்ச்சலுக்கு சாப்பிடும், ‘பாரசிட்டமால்’ என்பது மூலக்கூறின் பெயர். இவை, குரோசின், கால்பால், டோலோ போன்ற நிறுவன பெயர்களில் விற்கப்படுகின்றன.
ஜெனிரிக் மருந்துகள், உற்பத்தி செலவை மட்டுமே உள்ளடக்கியது. வணிகப் பெயர், விளம்பரம் இல்லாததால், மிகக் குறைந்த லாபத்திற்கு விற்கப்படுகிறது. சந்தையில் கிடைக்கும் மருந்து விலைகளை விட, 60ல் இருந்து, 80 சதவீதம் வரை, விலை குறைவாக கிடைக்கும்.
இதற்காக மத்திய அரசு சார்பில் மருந்து கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அதில், , ஜெனிரிக் வகை மருந்துகள் விற்கப்படுகின்றன. இந்த மருந்துகள் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதை தெளிவாக கண்டறிந்து வாங்கவைக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, மாத்திரைகளில் பெயர் எழுதும்போது, அதன் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை விட இரண்டு மடங்கு பெரிதாக ஜெனரிக் பெயர்களை எழுத வேண்டும். கடைகளில் ஜெனரிக் மருந்துகளை தனி அலமாரியில் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தற்போது, அந்த மாத்திரைகள் வாங்குபவர்களுக்கு அதை எளிதில் அடையாளம் கான நிறக்குறி யீடு அந்த மாத்திரைகளின் அட்டையில் பதிக்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.