பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில், பொதுமக்களின் தேவையை கருத்தில்கொண்டு பேக்கரிகளை திறக்க மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டு உள்ளது. இதனால், அனைத்து நிறுவனங்களும் அடைக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகளான மளிகை பொருட்கள், காய்கறிகள், மருந்து கடைகள் குறிப்பிட்ட நேரம் திறக்க அனுமதி வழங்கி உள்ளது.
இந்த நிலையில், தற்போது பேக்கரிகள் திறக்க மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. மக்களுக்கு பிரட், பட்டர் போன்றவைகளின் தேவை அதிகரித்து வரும் நிலையில், அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இது பேக்கரி உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Government of Karnataka permits bakeries to function. Good news for Iyengar bakeries! Bread and butter question 😊