டெல்லி:

தடை செய்யப்பட்ட பணம் வைத்திருப்பவர்கள் தண்டனைக்குள்ளாக்கப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8 ம் தேதி ஆயிரம் மற்றும் ஐநூறு நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். தடை செய்யப்பட்ட அந்த நோட்டுகளை வங்கிகளில்  டெபாசிட்  செய்ய டிசம்பர் இறுதிவரை கெடு தரப்பட்டது. மேலும் இந்தாண்டு மார்ச் 31 வரை பழைய
நோட்டுகளை  வங்கிகளில் டெபாஸிட் செய்யலாம் என ரிசர்வ் பேங்க் ஆப் இண்டியா காலக்கெடு அறிவித்தது.

இந்த நிலையில் செல்லாது என அறிவிக்கப்பட்ட ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகள் 10 எண்ணிக்கைக்கு மேல் பதுக்கி  வைத்திருந்தாலோ அல்லது ஆய்வு மாணவர்கள், பழைய ரூபாய்களை சேமித்து வைக்கும் பழக்கம் உடையவர்கள் 25 நோட்டுகளுக்கு
மேல் வைத்திருக்ககூடாது. அப்படி வைத்திருந்தால் கிரிமினல் குற்றமாக கருதப்படும். அவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அல்லது பிடிபட்ட
பணத்தில் ஐந்து மடங்கு இவற்றில் எது பெரியதோ அது தண்டனையாக விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்துக்கு
குடியரசுத்தலைவர் பிப்ரவரி 27 ம் தேதி ஒப்புதல் அளித்தார்.