புதுடெல்லி:
கொரோனா வைரசுக்கான தடுப்பூசி, தயாரிப்பாளர்களிடமிருந்து நேரடியாக சில முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் தடுப்பூசியை வாங்க அனுமதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது அரசாங்கத்தின் நிதி சுமையை குறைக்கும் ஒரு நடவடிக்கையாக கருதப்படுகிறது.
மேலும் கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசி அளவை பாதுகாக்க நிறுவனங்களை அனுமதிக்கும் திட்டமும் பரிசீலிக்கப்படுகிறது, ஏனெனில் இதனால் முக்கிய பொருளாதார நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாது என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த விரும்புகிறது என்று சில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எது எப்படியாக இருந்தாலும், இந்த திட்டத்தை இன்னும் பிரதமர் நரேந்திர மோடி அனுமதிக்கவும் இல்லை, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் இல்லை.
ஒரு வேளை இவ்வாறான ஒப்புதல் அளிக்கப்பட்டால் தடுப்பூசி தயாரிப்பதை மத்திய அரசு மேலும் கண்டிப்பாக கவனிக்கும் என்று தெரிகிறது, மேலும் தடுப்பூசி தயாரிப்பு முடிந்தவுடன் தனியார் மற்றும் அரசு சுகாதார ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
தடுப்பூசியை நேரடியாக வாங்க அனுமதிக்கும் நிறுவனங்கள் குறித்து அதிகாரிகள் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றாலும், பெட்ரோலியம், எஃகு, பார்மா, சிமெண்ட், நிலக்கரி போன்ற முக்கிய நிறுவனங்கள் முன்னேறக்கூடும் என்று அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதை பற்றின ஒரு அறிக்கையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் கொரானா வைரஸ் க்கான தடுப்பூசி தயாரிக்கும் திட்டத்தில் பெரும் பகுதிக்கு மாநில அரசுகள் நிதி அளித்திருப்பதாகவும், இதற்கு சுமார் 50,000 கோடி வரை செலவாகும் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்தியாவில் கிட்டத்தட்ட முப்பது கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன, இவற்றில் மூன்று தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட மனித சோதனையில் உள்ளதாகவும் அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.