டெல்லி: வாகன பதிவு, ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க மேலும் 3 மாதங்கள் கால அவகாசத்தை மத்திய அரசு வழங்கி உள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, வாகன ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், வாகனம் பதிவு புதுப்பித்தல் உள்ளிட்டவற்றுக்கு இம்மாதம் 31ம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதால் மேற்கண்டவற்றுக்கு கால அவகாசம் அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந் நிலையில் வாகன பதிவு, ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க மேலும் 3 மாதங்கள் கால அவகாசத்தை மத்திய அரசு வழங்கி உள்ளது. அதன்படி, வரும் ஜூன் மாதம் 30ம் தேதி அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.