சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி,  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று தீபாவளிக்கு மறுநாள் (வெள்ளிக்கிழமை) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், அரசு ஊழியர்களுக்கு  4 நாள் தொடர் விடுமுறை  கிடைத்துள்ளது. இதனால்  அரசு ஊழியர்கள் ஜாலியாக விடுமுறையை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

நடப்பாண்டு தீபாவளி பண்டிகை வரும் 31ந்தேதி வியாழக்கிழமை வருகிறது. இதனால், பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் நிலை கேள்விக்குறியானது. இதனால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பிலும்,  வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்று தமிழ்நாடு அரசு  தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும்‌ உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள்‌, பள்ளிகள்‌, கல்லூரிகள்‌ மற்றும்‌ கல்வி நிறுவனங்களுக்கு 01.11.2024 அன்று விடுமுறை  அறிவித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதன்மூலம் தீபாவளி நாளான அக்டோபர் 31 வியாழக்கிழமை, நவம்பர் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை, அடுத்த நாளான சனிக்கிழமை, வார விடுமுறை ஞாயிற்றுக் கிழமை ஆகிய 4 நாட்களுக்குத் தொடர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால் அரசு ஊழியர்களும் மாணவர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். 

இதுகுறித்துதமிழ்நாடு அரசு   இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  இந்த ஆண்டு தீபாவளியை 31.10.2024 அன்று கொண்டாடும்‌ பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச்‌ சென்று திரும்பும்‌ மாணவர்கள்‌, அவர்தம்‌ பெற்றோர்கள்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ அரசு அலுவலர்களின்‌ நலனைக்‌ கருத்தில்‌ கொண்டு 01.11.2024 அன்று ஒரு நாள்‌ மட்டும்‌ விடுமுறை அளிக்கப்படுகிறது.

தீபாவளியையொட்டி சொந்த ஊர் சென்று திரும்புவோருக்கு ஏதுவாக விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 31ஆம் தேதி வியாழக்கிழமை தீபாவளி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அடுத்த நாள் நவம்பர் 1ஆம் தேதியும் தமிழக அரசு விடுமுறை அறிவித்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

நவம்பர் 1ஆம் தேதி விடுமுறை விடப்படுவதால், அதனை ஈடு செய்ய நவம்பர் 9ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.