சென்னை:
மிழகம் மற்றும் ஆந்திரா இடையே வரும் நவம்பர் 25ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவை இயங்க உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறபிக்கப்பட்டு, தற்போது ஒவ்வொரு கட்டமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கின் போது மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து சேவைகள் இயக்கம் நிறுத்தப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் செப்டம்பர் 7 முதல் மாவட்டங்கள் இடையே குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கம் ஆரம்பித்தது. அக்டோபர் 31 முதல் இ பாஸ் இல்லாமல் புதுச்சேரிக்குப் பேருந்துகள் இயங்கி வருகின்றன.  இதையடுத்து நவம்பர் 16 முதல் கர்நாடகா மாநிலத்துக்குப் பேருந்துகள் இயக்கப்பட்டது.

தற்போது ஆந்திர முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழகம் ஆந்திரா இடையே இ பாஸ் இல்லாமல் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைக்கு அனுமதி அழிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை நவம்பர் 25-ம் தேதி முதல் தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.