டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியினர் வங்கதேசத்திற்கு பயணம் செய்ய வேண்டாம் என இந்திய கிரிக்கெட் வாரியான பிசிசிஐக்கு மத்தியஅரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் மாதம் வங்கதேசம் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு, மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த சுற்றுப்பயணம் ஆகஸ்ட் 17, 20, 23 தேதிகளில் ஒருநாள் போட்டிகளும், 26, 29, 31 தேதிகளில் டி20 போட்டிகளும் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இருப்பினும், இந்த சுற்றுப்பயணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது.
அங்கு நடைபெற்று வரும், இனமோதல் மற்றும் உள்நாட்டு கலவரம் மற்றும் அங்கு வசிக்கும் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் காரணமாக, அங்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என மத்தியஅரசு ஏற்கனவே அறிவிறுத்தி உள்ளது. அதனால், இந்திய கிரிக்கெட்அணியின் வங்கதேச சுற்றுப்பயணம் ரத்து செய்யப்படலாம் என தகவல்களும் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், மத்தியஅரசு, இந்திய கிரிக்கெட் அணியினர் வங்கதேசம் செல்ல வேண்டாம்என அறிவுறுத்தி உள்ளது. பிசிசிஐக்கு, இந்திய அணியை வங்கதேசம் அனுப்ப வேண்டாம் என்று மத்தியஅரசு உத்தரவிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கதேசத்தில் நிலைமை சரியில்லை என்பதால் அங்கு செல்ல வேண்டாம் என்று அரசாங்கம் BCCI-க்கு அறிவுறுத்தியுள்ளதால், வங்கதேசத்திற்கான இந்திய சுற்றுப்பயணம் ரத்து செய்யப்படலாம் என்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” என்று எதிர்பார்க்கப்படுகிறது.,