
தஞ்சை:
தமிழகத்தில் ஆளுநர் ஆட்சிக்கு அவசியமே இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
இன்று தஞ்சைக்கு வந்த விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செய்தியாளர்கள் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட தனக்கு விருப்பமில்லை என்று தெரிவித்தார். அதேநேரம் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சிக்கான தேவை இப்போது இல்லை என்றும் அவர் கூறினார்.
டெல்டா மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை எனவும் விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.
Patrikai.com official YouTube Channel