சினி கிராஃப்ட் பிலிம்ஸ் சாய் ராஜகோபால் இயக்கத்தில் ‘காமெடி கிங்’ கவுண்டமணி நடிக்கும் முழு நீள அரசியல்-நகைச்சுவை திரைப்படம் ‘ஒத்த ஓட்டு முத்தையா’.
தற்கால அரசியலை தனது பாணியில் நையாண்டி செய்யும் கவுண்டமணியுடன், யோகி பாபு, ராஜேஸ்வரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளதையடுத்து இந்தப்படம் விறுவிறுப்பாக வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
சென்னையில் உள்ள பரணி’ டப்பிங் ஸ்டூடியோவில் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் டப்பிங் பணிகளில் பங்கேற்ற கவுண்டமணி, தொடர்ந்து எட்டு மணி நேரம் உற்சாகத்துடன் டப்பிங் பேசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
[youtube-feed feed=1]