மும்பை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பேட்மின்டன் நட்சத்திரங்களுக்கு ஆன்லைன் முறையில் பயிற்சியளித்து வருவதாக கூறுகிறார் இந்திய பாட்மின்டன் அணியின் தலைமைப் பயற்சியாளர் கோபிசந்த்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பல விளையாட்டுத் தொடர்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளதன் காரணமாக பல விளையாட்டு வீரர்கள் முடங்கியுள்ளனர். அதில் பாட்மின்டன் விளையாட்டும் ஒன்று.

இந்நிலையில், அந்த விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து பயிற்சியளிக்கும் வகையில், புதிய வாட்ஸ்ஆப் குரூப் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
இதன்மூலம், பல முன்னணி வீரர்-வீராங்கனைகள் விளையாடும் வீடியோக்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி, தேவையான ஆலோசனைகளை வழங்குகிறார்.

இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, “வீரர்கள் வீட்டிலிருந்தபடி உடற்பயிற்சி மட்டுமே செய்ய முடியும். இதனால் ஆடுகளத்தில் செயல்படுவதற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டியிருந்தது. இதனால், இதுபோன்ற வீடியோக்களை அனுப்பி, ஆலோசனைகளை வழங்கி, ஆன்லைனில் பயிற்சியளிக்கிறேன்” என்றார்.