ஆல்பபெட் நிறுவனத்தின் கூகிள் நிறுவனம் கடந்த வியாழன்று ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. கொரோனாவைரஸ் பெருந்தொற்று அதிகமாக பாதிக்காமல் இருக்க அரசாங்கங்கள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தன. இந்நிலையில் 131 நாடுகளில் ஊரடங்கு உத்தரவுக்கு முன்னும் பின்னும் மக்கள் அதிகமாக பயணம் செய்யும் இடங்களின் தரவுகளை கூகிள் மேப் கொண்டு இந்த ஆய்வறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுதும் ஆன்டிராய்டு பயன்படுத்தும் பில்லியன் கணக்கான ஆன்டிராய்டு, கூகிள் மேப் பயனர்களின் தொலைபேசிகளில் இருந்து இருப்பிடத் தரவுகளை கொண்டு மக்கள் அதிகம் செல்லும் இடங்களான கடைகள், கூடங்கள், வேலை செய்யுமிடங்கள் போன்ற இடங்களில் மக்கள் கூடும் கூட்டத்தை தொகுத்து, அதைப்பகுப்பாய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஊரடங்கு உத்தரவு சரியாக கடைப்பிடிக்கப்படுகின்றதா என்று அறியலாம்.
இந்தியாவில் உணவகங்கள், விற்பனை மையங்கள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள், சினிமா அரங்கங்களுக்கு செல்லும் கூட்டம் 77% குறைந்துள்ளது
மளிகைக்கடைகளிலும், மருந்தங்களுக்கும் செல்லும் கூட்டம் ஏறக்குறைய 65% குறைந்துள்ளது.
மக்கள் பயணிக்கும் பஸ் நிலையங்களிலும், இரயில் நிலையங்களிலும் 71% கூட்டம் குறைந்துள்ளது.
அறிக்கைகள் கிடைக்குமிடம்
https://www.google.com/covid19/mobility/
ஆனால் பயனாளர்கள் பலரும் தங்களின் தனியுரிமையை கூகிள் மீறியுள்ளதாக அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில் கூகிள் நிறுவனமோ தாங்கள் வெளியிட்டுள்ள இந்த பகுப்பாய்வு அறிக்கை எங்கள் பயனாளர்களின் தனியுரிமையை மீறாது.
இந்த அறிக்கைகளில் உள்ள தகவல்கள், கூகிள் மேப் சேவை வழியாக தன் புவிடயிங்காட்டி சேவையை இயல்பு நிலையில் வைத்திருப்பவர்களிடம் இருந்து மட்டுமே பெறப்பட்டுள்ளது. மேலும் இது எந்தப்பெயருடனும் தகவல்கள் சேமிக்கப்படவில்லை , அரசாங்கத்திற்கு உதவவே இந்த ஆய்வை செய்ததாக கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
செல்வமுரளி