கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பேடிஎம் செயலி திடீரென நீக்கம் செய்யப்பட்டு உள்ளது. இது பயனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விளையாட்டு போட்டிகளின் மீது பேடிஎம் வாயிலாக பெட்டிங் (சூதாட்டம்)  வைக்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், இந்த அதிரடி நடவடிக்கையை கூகுள் எடுத்துள்ளதாக அறிவித்து உள்ளது.

ஐபிஎல் போட்டிகள்  செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்க உள்ள நிலையில், அது தொடர்பாக பெட்டிங் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, விதிமீறல் காரணமாக பேடிஎம் ( paytm) செயலி நீக்கப்பட்டு உள்ளது. முறையற்ற  பயன்பாடுகளை தவிர்க்கும் வகையில், பேடிஎம் செயலி நீக்கப்பட்டு உள்ளதாக  அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து பயனர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்று பேடிஎம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது.

டிஜிட்டில் இந்தியாவின் நிதி பர்வர்த்தனைக்கு பேடிஎம் முக்கிய பங்காற்றி வருகிறது.  நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில்,  வாகனங்களுக்கு பாஸ்டேக் எனப்படும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.  சுமார்  30 லட்சம் பேருக்கு பாஸ்டேக் வழங்கி சாதனை படைத்துள்ளது. மேலும் பேடிஎம் நிறுவனத்துக்கு   பேமென்ட் வங்கி தொடங்குவதற்கும் கடந்த ஆண்டு  மத்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது

இந்த நிலையில் சமீபத்தில்,  பேடிஎம் நிறுவனத்தில்,  சீனாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபாவின் துணை நிறுவனமான ஆண்ட் ஃபினான்ஷியல் என்ற நிறுவனம் பேடிஎம் நிறுவனத்தின் முதலீட்டாளர்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இதன் மூலம் சமீபத்தில்  பிஎஃப் ஜி (Paytm First Games -PFG),  நிறுவனம் மூலம் கேம் ஒன்று அறிமுகப்படுத் தப்பட்டது.

இந்தியாவின் முன்னாள் நட்சத்திர  கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை அதன் பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார். இது சர்ச்சையாக உள்ளது.

இந்த பரபரப்பான நிலையில், பேடிஎம், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது, பயனர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.