புதுடெல்லி:
தேர்தல் விளம்பரங்களை வெளியிடும்போது, வெளிப்படைத் தன்மையோடு செயல்படுவோம் என கூகுள் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
இது தொடர்பாக கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்திய மக்களவைத் தேர்தல் வருவதையொட்டி, அரசியல் விளம்பரங்களை வெளியிடுவதில் வெளிப்படைத் தன்மையை கடைபிடிப்போம்.
தேர்தல் தொடர்பான செய்திகளை மக்களுக்கு தெரியப்படுத்துவதிலும் கவனம் செலுத்துவோம்.
இந்த விளம்பரத்தில் உள்ள விபரம் எல்லாம் பணம் செலுத்தியுள்ள விளம்பரதாரர்கள் கொடுத்ததே என்ற தகவலை சொல்வோம்.
ஒவ்வொரு அரசியல் விளம்பரத்துக்கும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறவேண்டியுள்ளது. வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு முன்னரே சான்று அளிக்கும் வகையில் விளம்பர கொள்கையில் இந்திய அரசு மாற்றம் கொண்டு வரவேண்டும்.
அரசியல் விளம்பரங்கள் வரும்போது, அதை தருபவரின் பின்னணி குறித்து விசாரித்துவிட்டே பெறுவோம்.
விளம்பரம் தருவோரின் விபரம் சரிபார்ப்பு பணி பிப்ரவரி 14 முதல் தொடங்கும். இந்திய அரசியல் கட்சிகளின் விளம்பரம் மற்றும் விளம்பர நூலகம் குறித்த தகவல் நேரலையில் தரப்படும்.
இவ்வாறு கூகுள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.