டில்லி
கூகுளில் இந்தியாவின் முதல் பிரதமராக மோடி படம் தென்படுவது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.
இணைய தேடுதலில் முதல் இடத்தில் உள்ளது கூகுள் ஆகும் கூகுள் தேடுதல் தளம் பிரபலாமானதற்கு முக்கிய காரணம் அந்த தேடுதலில் சரியான விவரங்கள் கிடைக்கும் என்பதே ஆகும். அத்துடன் அது சம்பந்தமான வேறு சில கேள்விகளையும் கூகுள் தளம் உடன் வழங்குவதும் வழக்கமாகும்.
இவ்வாறு இந்தியாவின் முதல் பிரதமர் யார் என்னும் தேடுதலில் கூகுள் தளம் ஜவகர்லால் நேருவின் பெயரைக் காட்டுகிறது. அதே நேரத்தில் மோடியின் புகைப்படத்தை அந்த தளம் காட்டுகிறது. நேற்று இந்தத் தவறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த தவறு ஸ்கிரீன் ஷாட் எடுக்கப்பட்டு பல சமூக தளத்திலும் வெளியாகியது. ஒரு சிலர் கூகுளைப் பொறுத்தவரை ஜவகர்லால் நேரு பார்க்க மோடி போல இருந்திருக்கலாம் என கிண்டல் செய்து வருகின்றனர்.