டில்லி
இன்று கூகுள் சிறப்பு டூடுள் வெளியிட்டு தனது 23 ஆம் பிறந்த நாளைக் கொண்டாடுகிறது.
உலகின் தலைசிறந்த தேடு தளமான கூகுள் பல்வேறு துறைகளிலும் சாதனைகள் படைத்து வருகின்றது. கடந்த 1998 ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் இந்த தளத்தைத் தொடங்கினர்.
தற்போது பல்வேறு மொழிகளிலும் கிளை பரப்பியுள்ள இந்த தடத்தில் இல்லாத பொருளே இல்லை என்னும் அளவுக்கு வளர்ந்துள்ளது. கூகுளில் மென்பொருட்கள், ஆன்லைன் விளம்பரங்கள், வன்பொருட்கள் என பல்வேறு துறைகளும் இடம் பெற்றுள்ளன.
இன்று கூகுளுக்கு 23 ஆம் பிறந்த நாள் ஆகும். இதைக் கொண்டாடும் வகையில் கூகுள் தேடுதளம் ஒரு புதிய டூடுளை வெளியிட்டுள்ளது. இது கூகுளின் பணிகள். செயல்பாடுகளை விளக்கும் விதமாக அமைந்துள்ளது.