கூகிள் நிறுவனத்திற்கு சமூகவலைத்தளம் செயலி என்றாலே ராசியில்லை போல. ஏற்கனவே ஆர்குட் சமூக வலைத்தளத்தினையும் நிறுத்தியிருந்த நிலையில் கூகிள் + சமூக வலைத்தள செயல்பாட்டையும் நிறுத்துவதாக அறிவிருத்திருந்தது.
பேஸ்புக்கிற்கு போட்டியாகத்தான் தொடங்கப்பட்ட கூகிள் + பயனாளிகளை ஈர்க்கவில்லை என்பதால் பயனாளிகளின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே இருந்தது. அதேபோல் இதில் பாதுகாப்பு அம்சங்களும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை, மேலும் கூகிள் +ல் இருந்து 5 லட்சம் பேரின் தகவல்கள் திருடப்பட்டு இருக்கிறது என்பது அதன் பயனாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் கூகிளோ அடிப்படை விவரங்கள் மட்டுமே திருடு போய் இருப்பது என்று தெரிவித்தது.
இந்நிலையில்தான் கூகிள் + சேவையை நிறுத்தப்போவதாக கூகிள் நிறுவனம் அறிவித்திருந்தது. ஏப்ரல் 2வது வாரத்தில் முழுமையாக இச்சேவை நிறுத்தப்படும் என்றும் அதில் உள்ள தகவல்கள் நீக்கப்படும் என்றும் கூகிள் தெரிவித்திருந்த நிலையில் இணையத்தள காப்பக நிறுவனங்களான https://web.archive.org/ https://www.archiveteam.org/ இரண்டு நிறுவனங்களும் இணையத்தளங்களை சேமித்து வைக்கக்க உதவும் காப்பகங்களாக விளங்கிவருகின்றன.
இந்த இரண்டு தளங்களும் கூகிள் + தளத்தில் எல்லா பயனாளர்களுக்கும் பொதுவாக வைத்த தகவல்களை தங்கள் இணையக் காப்பகத்தில் சேமிக்க உள்ளதாக தெரிவித்துள்ளன.
இந்த இணையக் காப்பகத்தில் பயனாளர்கள் பொது என்ற அடையாளமிட்ட தகவல்களை மட்டும் மேமிப்பதாகவும், பயனாளர்கள் தனிப்பயன்பாடு என்று அடையாளமிட்டிருக்கும் தகவல்களை தாங்கள் சேமிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளன
அதோடு காணொளிகளும், படங்களும் குறைந்த ரெசொல்யூசனில் சேமித்துவைக்கப்படும் எனவும், பொது என்று அடையாளிட்ட செய்திகளில் உள்ள மறுமொழிகளில் 500 மறுமொழிகளை மட்டுமே சேமிக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்
எப்படியோ பயனாளர்கள் தாங்கள் கஷ்டப்பட்டு எழுதிய விபரங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எழுதிய தகவல்கள் எப்போது பொதுமக்கள் பயன்பாட்டற்கு கிடைத்தால் சரி…