பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கூகுள் டூடுள் வடிவமைக்கும் போட்டியை கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. “G-O-O-G-L-E” என்ற வார்த்தையை அழகிய தோற்றத்தில் வரைந்து 2D படமாக சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் மார்ச் 18 என கூறப்பட்டுள்ளது.

Doodle

இணையத்தின் தேடுபொறிகளில் கூகுள் மிக முக்கைய பங்காற்றி வருகிறது. யாருக்கு எந்த தகவல் தேவைப்பட்டாலும் கூகுளில் சென்று பார்த்துக் கொள்ளலாம். அந்த வகையில் கூகுள் அனைத்து தகவல்களை தனது தேடுபொறியில் வைத்துள்ளது.

கூகுள் தேடுபொறியின் முதல் பக்கத்தில்( Homepage) ’கூகுள்’ என்ற ஆங்கில வார்த்தையின் டூடுள் தினமும் புதிதாக இடம்பெறுவது வழக்கம். அதில் Google என்ற ஆங்கில வார்த்தை தனித்துவமான வடிவமைப்பில் அமைந்திருக்கும். ஒவ்வொரு நாளின் சிறப்பு அம்சத்தை அடிப்படையாக கொண்டு கூகுள் டூடுள் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படும்.

இந்நிலையில், இந்த கூகுள் டூடுளை வடிவமைக்கும் பொறுப்பை தற்போது கூகுள் நிறுவனம் மாணவர்களின் கொடுத்துள்ளது. அதாவது, பள்ளி மாணவ, மாணவிகள் கூகுள் டூடுள் வடிவமைக்கும் போட்டியை கூகுள் நிறுவனம் நடத்த உள்ளது. இந்த ஆண்டிற்காக கூகுள் டூடுள் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் இதில் கலந்துகொள்ளலாம். போட்டியாளர்கள் 5 பிரிவுகளில் (K-3, 4-5, 6-7, 8-9, and 10-12) மதிப்பீடு செய்யப்படுவர். முதல் நான்கு சுற்றுக்கு பிறகு ஐந்து பேர் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர்.

கூகுள் டூடுள் வடிவமைக்கும் போட்டிக்கு “நான் வளர்ந்த பிறகு…” (“When I grow up, I hope…”) என்ற தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இத்தலைப்புக்குப் பொறுத்தமான வகையில் டூடுள் வரைபடங்களை வரைந்து போட்டிக்கு சமர்ப்பிக்கலாம். அதில் “G-O-O-G-L-E” என்ற வார்த்தையை அழகிய தோற்றத்தில் வரைந்து 2D படமாக சமர்ப்பிக் வேண்டும்.

இதில் கிராபிக்ஸ், வீடியோ போன்றவை ஏற்றுக்கொள்ளப்படாது. டூடுளை வரைந்து அனுப்ப வேண்டிய கடைசி நாள் மார்ச் 18ம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் வெற்றிப்பெறும் மாணவர்களுக்கு ஒரு குரோம்புக் மற்றும் டேப்லெட் பரிசாக அளிக்கப்படும். எனினும் இப்போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த பள்ளி மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.