டில்லி

ந்திய அரசால் நியமிக்கப்படும் ஹேக்கர்கள் போலி இ மெயில் மூலம் கடந்த 3 மாதங்களில் 500 பேரை உளவு பார்க்க முயன்றதாக கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது

உலகெங்கும் உள்ள பல நாடுகளில் அரசாங்கத்தின் மூலம் நியமனம் செய்யப்படும் ஹேக்கர்கள் பல்லாயிரக்கணக்கான கணக்குகளை ஹேக் செய்ய முயன்றுள்ளனர்.  இவர்கள் ஒரு போலி இ மெயிலை தாங்கள் வேவு பார்க்க முயல்பவர்களுக்கு அனுப்புவது வழக்கமாகும்.   அந்த இ மெயிலை திறந்தால் அதன் பிறகு அந்த பயனாளிகளின் கணினிக்குள் ஊடுருவி அனைத்து விவரங்களையும் ஹேக்கர்களால காண முடியும்.

இது குறித்து கூகுளின் பிரச்சினைகள் ஆய்வுக் குழு  பல நாடுகளில் இருந்து அரசால் நியமிக்கப்பட்ட ஹேக்கர்களை கண்காணித்து வந்தது.  இந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்று மாதங்களில் சுமார் 149 நாடுகளைச் சேர்ந்த 12000க்கும் அதிகமான கணக்குகளை ஹேக் செய்ய முயன்றுள்ளது தெரிய வந்துள்ளது.

இது குறித்து கூகுள் பிரச்சினை ஆய்வுக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் அக்குழுவைச் சேர்ந்த ஷேன் ஹண்ட்லி இந்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.  இதில் இந்தியாவைச் சேர்ந்த 500 பேருக்கும் மேற்பட்டோர் கணக்கை ஹேக் செய்ய முயற்சி நடந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.  அத்துடன் இந்த 12000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இது குறித்து ஏற்கனவே எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உலகெங்கும் அமெரிக்கா,, பாகிஸ்தான், வியட்நாம், தென் கொரியா போன்ற நாடுகளில் தலா ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் அரசால் நியமிக்கப்பட்ட ஹேக்கர்கள் ஹேக் செய்ய முயன்றுள்ளனர்.  அத்துடன்,  இந்தியா,  கனடா சவுதி அரேபியா, ஈரான், துருக்கி, எகிப்து, நைஜீரியா வங்க தேசம் உள்ளிட்ட நாடுகளில் தலா 500க்கும் மேற்பட்ட கணக்குகள் ஹேக் செய்ய முயற்சி நடந்துள்ளது.