உலகெங்கிலும், அரசாங்கங்களும், சுகாதார அதிகாரிகளும் ஒன்றிணைந்து கோவிட் -19 தொற்றுநோய்க்கு தீர்வு காணவும், மக்களைப் பாதுகாக்கவும், சமுதாயத்தை மீண்டும் உயிர்பிக்கவும் தீவிரமாக பணியாற்றிவருகின்றனர் . உலகின் பிரபல மென்பொருள் நிறுவனங்கள் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு தொழில்நுட்பம் வழியே ஒரு செயலி ஒன்றை உருவாக்கி அதன் வழியே கொரோனோ தொற்றின் பரவலை  கண்டறிய  இணையவிருப்பதுதான் தொழில்நுட்ப உலகின் ஆச்சர்யம்.

இப்போதைய செல்போன் சந்தையில் ஆன்டிராய்டும், ஐஓஎஸ் செயலிகள்தான் பெரும்அளவு பயன்படுத்தப்பட்டுவருகின்றன. எனவே இவ்விரு நிறுவனங்களுக்கும் தங்களின் பயனர்களின் இருப்பிடங்களைக் கண்காணிப்பது வெகு எளிது , இதன் மூலம் கோவிட் -19 வைரஸ் உள்ள ஒருவருடன் தொடர்பு கொண்டிருந்தார்களா என்பதை உறுதி செய்யவும் இச்செயலி உதவும்

இந்த செயலி மூலம் COVID-19 க்கு உள்ள நபரின் அருகில் நீங்கள் சென்றால் அது உங்களுக்கு தொற்று உள்ள நபர் உங்கள் அருகில் இருப்பதை ப்ளுடூத் நுட்பம் வழியே உங்களுக்கு தெரியப்படுத்தும், அதோடு உங்களுக்கும் பரிசோதனையில் COVID-19 இருக்கிறது என்று இந்த செயலியில் குறித்துவிட்டால் சுகாதார அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தும், உங்களைப் பற்றிய விபரங்களையும், நீங்கள் யாருடன் தொடர்பில் இருந்தீர்கள் என்பதையும் இந்த செயலி வழியே அறிந்து தொற்றுப்பரவலை அறியலாம் , அதோடு பிறருக்கும் எச்சரிக்கை செய்யலாம்
மே மாதம் இதன் முதல் பதிப்பு கிடைக்கும். அதோடு இது மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்படும் என்றும் இரு நிறுவனங்களுக்கும் தெரிவித்துள்ளன.

அதே சமயம் பயனாளர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு மீறாத வகையில் எங்கள் செயலிகள் செயல்படும் என்றும் இரு நிறுவனங்களுக்கும் தெரிவித்துள்ளன

பொதுப்பிரச்னைக்கு ஒன்றுக்கு உலகின் பெரிய நிறுவனங்கள் கைகோர்த்து இருப்பது வரவேற்ப்புக்குரியது. ஏற்கனவே இந்நிறுவனங்கள் பல தொழில்நுட்பங்களின் அமைப்பில் இருந்து பணியாற்றியவை என்றாலும் இணைந்து செயலாற்றுவது கொரோனாவினால்தான்

இணைந்த கைகள் என்றும் இணைந்தே இருக்கட்டும்

செல்வமுரளி