இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் தண்டவாளத்தில் எரிபொருளை ஏற்றிச் சென்ற ரயில் ஒன்று காட்டு யானைக் கூட்டத்துடன் மோதியதால் தடம் புரண்டதாக அந்நாட்டு ரயில்வேத் துறை இன்று தெரிவித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் கொழும்பு கொலனாவ பெட்ரோலிய சேமிப்பு கிடங்கில் இருந்து கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு நோக்கி சென்ற சரக்கு ரயில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் நான்கு எண்ணெய் கன்டெய்னர்கள் தடம் புரண்டதாகவும் இரண்டு யானைகள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விபத்து காரணமாக ரயில் தண்டவாளங்களில் சேதம் ஏற்பட்டதை அடுத்து கொழும்பு – மட்டக்களப்பு பிரதான பாதையின் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.