சென்னை: தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும்  குறைந்துள்ளது. இன்றும் சரவனுக்கு ரூ480 குறைந்துள்ளது.

மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி மீதான சுங்க வரி குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்தார். அதன்படி, தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் போது விதிக்கப்படும் சுங்க வரி 10 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.

இதைத்தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்று ( (ஜூலை 24)  மாலை தங்கத்தின் விலை குறையத்தொடங்கியது. இதைத்தொடர்ந்து இன்று 3வது நாளாக இன்றும் விலை குறைந்துள்ளது.  . கடந்த மூன்று நாட்களில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.3,400 வரை குறைந்துள்ளது.

இன்று (ஜூலை 25) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 ஆக குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.6,430-க்கு விற்பனை ஆகிறது. இதனால் பவுனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.51,440-க்கு விற்பனை ஆகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.55,080 ஆகவும் கிராம் ஒன்று ரூ.6,885 ஆகவும் விற்பனையாகிறது.

அதேபோல், சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ரூ.3 குறைந்து ரூ.89 க்கு விற்பனையாகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.89,000 ஆக விற்பனையாகிறது.

முன்னதாக, நேற்றைய தினம் (புதன்கிழமை) கிராமுக்கு ரூ.60 மற்றும் செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ. 275 என தங்கம் விலை குறைந்தது குறிப்பிடத்தக்கது.

மும்பை

மும்பை நகரில் (Gold Rate in Mumbai) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.7,086 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,495 ஆகவும் விற்பனையாகிறது.

டெல்லி

டெல்லியில் (Gold Rate in New Delhi) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம்ஒன்றிற்கு ரூ.7,101 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,650 ஆகவும் விற்பனையாகிறது.

கொல்கத்தா

கொல்கத்தாவில் (Gold Rate in Kolkata) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ. 7,086 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,495 ஆகவும் விற்பனையாகிறது.

ஐதராபாத்

ஐதராபாத் நகரில் (Gold Rate in Hydrabad)24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ. 7,086 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,495 ஆகவும் விற்பனையாகிறது.

அகமதாபாத்

அகமதபாத் (Gold Rate in Ahmedabad) நகரில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.7,091 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,500 ஆகவும் விற்பனையாகிறது.

திருவனந்தபுரம்

திருவனந்தபுரத்தில் (Gold Rate Trivandrum) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ. 7,086 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,495 ஆகவும் விற்பனையாகிறது.

பெங்களூரு

பெங்களூருவில் (Gold Rate in Bengalore )24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ. 7,484 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,860 ஆகவும் விற்பனையாகிறது.

ஜெய்ப்பூர்

ஜெய்ப்பூரில் (Gold Rate in Jaipur )24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம்ஒன்றிற்கு ரூ.7,086 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,495 ஆகவும் விற்பனையாகிறது.

புனே

புனே நகரில் (Gold Rate in Pune ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ. 7,086 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,495 ஆகவும் விற்பனையாகிறது.